வீட்டிலேயே சிகிச்சை பெற்றாலும்
காப்பீட்டுத் தொகை கிடைக்கும்!
புற்றுநோய் பாதிப்பு
கர்நாடகத்தை சேர்ந்த, வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பத்மநாப ஷெட்டி என்ற முதியவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டது.
மருத்துவரின் ஆலோசனை
மாதந்தோறும் சில ஊசிகள் செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
காப்பீட்டு நிறுவனத்தின் மறுப்பு
அதற்கான செலவைக் காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டபோது, “நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, வீட்டிலேயே ஊசி போட்டுக்கொண்டீர்கள். எனவே தொகை வழங்க முடியாது” என மறுத்துவிட்டனர்.
லோக் அதாலத்தில் வழக்கு
கோபமடைந்த ஷெட்டி, மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) முறையிட்டு வழக்குத் தொடுத்தார். விசாரித்த நீதிபதிகள், “மருத்துவமனையில் சேர்ந்து படுக்கையில் இருந்துதான் சிகிச்சை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; நோயாளிக்கு என்ன தேவையோ அதுவே முக்கியம்” எனக் கூறி, காப்பீட்டுத் தொகையையும் இழப்பீட்டையும் வழங்க உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்தத் தீர்ப்பை ஏற்காத காப்பீட்டு நிறுவனம், விடாப்பிடியாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதியின் முக்கிய கருத்து
“மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மட்டுமே ஒரு சிகிச்சையைத் தீர்மானிக்கும் அளவுகோல் அல்ல. நோய்க்கு என்ன மருந்து அவசியமோ அதுவே முக்கியம்; அதை எங்கிருந்து பெற்றார்கள் என்பது முக்கியமல்ல. சிகிச்சையின் மருத்துவத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், அது எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் காப்பீட்டு நிறுவனங்கள் கணக்கிடுவது தவறு.” — கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி
நிறுவனத்திற்குக் கடும் கண்டனம்
தேவையில்லாமல் மக்களை வழக்காடி வைத்து அலைக்கழித்ததற்காகக் காப்பீட்டு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதிரடி உத்தரவு
மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், 30 நாட்களுக்குள் பத்மநாப ஷெட்டிக்குச் செலுத்த வேண்டிய தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.
₹50,000 அபராதம்தீர்ப்பின் சாராம்சம்
‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே காப்பீட்டுத் தொகை தருவோம்’ எனச் சொல்வது சட்டப்படி தவறு. நோயாளிக்குத் தேவையான, முறையான சிகிச்சை கிடைத்தாலே போதும்; காப்பீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

