கண்டிப்பா கூகிள் கிட்ட இருந்து உங்களுக்கு இப்படி ஒரு மெயில் வந்துருக்குமே.. பாருங்க பாஸ்! வழக்கம் போல “நம்ம கூகிள் தானே, ஏதோ அப்டேட் அனுப்பியிருக்கான்”னு நெனைச்சு அசால்ட்டா கடந்து போயிருப்போம். ஆனா, அந்த மெயிலுக்குள்ள தான் இவ்வளவு பெரிய கார்ப்பரேட் தந்திரமே ஒளிஞ்சிருக்கு!
“இன்டர்நெட்ல ஒரு விஷயம் உங்களுக்கு ஃப்ரியா கிடைக்குதுன்னா… அங்கே விற்கப்படுற பொருள் வேற எதுவும் இல்லை பாஸ், நீங்கதான்!” இதை நாம எப்பவுமே மறந்துடக் கூடாது.
கூகுள் கொண்டு வந்திருக்கிற இந்த புது அப்டேட் மூலமா நம்ம தேடல்கள் இன்னும் ஈஸியா மாறலாம், சூப்பரான வசதிகள் கிடைக்கலாம். ஆனா, அதுக்கு விலையா நாம கொடுக்கப்போறது நம்மளோட ‘பிரைவசி’ (Privacy) என்கிற மிக முக்கியமான ரகசியங்களைத்தான்.
அப்படி என்னதான் பண்றான் கூகுள்? வாங்க அக்குவேறு ஆணிவேறா பிரிச்சுப் பாத்துடுவோம்!

1. என்ன புது தந்திரம் பாஸ் இது?
இதுவரைக்கும் நாம தேடுற ஹிஸ்டரி (Search History), பர்சனலைசேஷன் எல்லாமே ‘Web & App Activity’ங்கிற ஒரே பெட்டிக்குள்ள தான் இருந்துச்சு. ஆனா, இனிமேல் இதைப் புத்திசாலித்தனமா ரெண்டா பிரிக்கப் போறான் கூகுள்:
- Search Services History: நீங்க என்ன தேடுனீங்கன்னு பார்த்துக்கிற பழைய டைரி.
- Personalized Recommendations: உங்களுக்குப் புடிச்ச மாதிரி விளம்பரங்களையும் கன்டென்ட்டையும் காட்ற ஏரியா.
ஆனா, இதுல ஒளிஞ்சிருக்கிற உள்குத்து என்ன தெரியுமா பாஸ்? இனிமே நீங்க கூகுள் லென்ஸ்ல (Google Lens) எடுக்குற போட்டோஸ், ஆடியோஸ், வீடியோஸ் மற்றும் நீங்க அனுப்புற ஃபைல்ஸ் எல்லாத்தையும் கூகுள் தனியா எடுத்து சேமிக்கப் போறான்!
2. ஏஐ (AI) மாடல்களுக்கான ‘டிஜிட்டல் தீனி’!
ஏன் திடீர்னு போட்டோவையும் ஆடியோவையும் சேமிக்கிறான்னு கேக்குறீங்களா? அங்கதான் இருக்கு அவனோட ‘Gemini’ ஏஐ பிளான்.
இப்போதெல்லாம் நாம சும்மா டைப் பண்ணித் தேடுறதை விட, ஒரு பொருளைப் போட்டோ எடுத்தோ (Visual Search) அல்லது பாட்டைக் கேட்க வச்சோ தேடப் பழகிட்டோம். உலகத்துல இருக்குற கோடிக்கணக்கான மக்கள் தினமும் எடுக்குற போட்டோக்களும், ஆடியோக்களும் கூகுள் கைக்குக் கிடைச்சா… மனுஷங்க எதை விரும்புறாங்க, உலகத்தை எப்படிப் பார்க்குறாங்கன்னு அவனோட ஏஐ மாடல்களுக்கு செமையா கத்துக் கொடுக்கலாம். சுருக்கமா சொன்னா, நம்ம டேட்டா தான் அவனோட ஏஐ-க்கான அல்வா துண்டு!
3. நம்மள வச்சே நமக்கே ஆப்பு (Hyper-Personalized Ads)
கூகுளோட மெயின் கல்லா கட்டுற பிசினஸே இந்த விளம்பரங்கள் தான். இதுவரைக்கும் நீங்க நெட்ல எதைப் படிச்சீங்கன்னு வச்சு விளம்பரம் காட்டிய கூகுள், இனிமேல் நீங்க நிஜ லைஃப்ல எந்தக் கடைக்கு போறீங்க (மேப்ஸ் மூலமா), எதை போட்டோ எடுக்குறீங்க (லென்ஸ் மூலமா) எல்லாத்தையும் நோட் பண்ணி வைப்பான்.
அப்புறம் என்ன பாஸ்… உங்களுக்கு ஒரு பொருள் தேவைன்னு உங்க மனசுக்குத் தெரியுறதுக்கு முன்னாடியே, அதை உங்க போன் ஸ்கிரீன்ல விளம்பரமா கொண்டு வந்து நிறுத்துவான். அசாத்தியமான தந்திரம் இல்ல!
4. சட்டப் பிடியிலிருந்து சாதுரியமான தப்பிப்பு!
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள்ல எல்லாம் இப்போ ‘பிரைவசி சட்டம்’ ரொம்பக் கடுமை பாஸ். நமக்குத் தெரியாம நம்ம டேட்டாவை எடுத்தா கோர்ட்ல வச்சு பல ஆயிரம் கோடி ஃபைன் போட்டுடுவாங்க.
அதுக்குத்தான் இந்த புது ரூட்! “மொத்தமா ஆன் பண்ணா பயந்துட்டு ஆஃப் பண்ணிடுவாங்க… அதனால ‘ஹிஸ்டரி’ வேணும்னா ஆன் பண்ணிக்கோ, ‘மீடியா’ வேணாம்னா ஆஃப் பண்ணிக்கோ”ன்னு ஆப்ஷனைப் பிரிச்சுத் தர்றான். இதனால நாமளும் ஏதோ நமக்குத்தான் முழு கன்ட்ரோல் இருக்குன்னு நெனைச்சு நமக்குத் தேவையானதை ஆன் பண்ணி வைப்போம். அவனுக்கும் சட்டப்படி டேட்டா ஃப்ரீயா கிடைக்கும், கவர்மென்ட் கிட்டயும் மாட்ட மாட்டான்!
திட்டமிடாம கார்ப்பரேட் உலகத்துல எந்தவொரு இலையும் அசையாது பாஸ். அடுத்த 10 வருஷத்துக்கு ஏஐ (AI) உலகத்தை ஆள்றதுக்காக கூகுள் இப்போவே செம நீட்டான ஒரு ஸ்கெட்ச் போட்டுட்டான். இனிமேலாவது கூகுள் கிட்ட இருந்து வர்ற மெயிலை கொஞ்சம் உஷாரா கவனிப்போம். என்ன சொல்றீங்க பாஸ்?
