உலகிலேயே விலையுயர்ந்த வீடுகளில் ஒன்று முகேஷ் அம்பானியின் வீடு. அந்த பிரம்மாண்ட மாளிகைக்குள் என்ன நடக்கும் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய ஆச்சரியம். குறிப்பாக, அந்த வீட்டுச் சமையலறையில் தினமும் 4,000 ரொட்டிகள் சுடப்படுகின்றன என்ற தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்பானி குடும்பத்தின் சிம்பிள் டயட்!
ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், முகேஷ் அம்பானியின் உணவுப் பழக்கம் ஒரு சாமானிய மனிதரைப் போலவே மிகவும் எளிமையானது. அந்த மாளிகையில் வசிப்பவர்கள் அனைவரும் தீவிரமான சைவ உணவாளர்கள்.
- காலை உணவு: இட்லி-சாம்பார் மற்றும் பப்பாளி ஜூஸ் தான் முகேஷ் அம்பானியின் பேவரைட்.
- மதிய உணவு: குஜராத்தி ஸ்டைலில் பருப்பு, சாதம் மற்றும் காய்கறிகள்.
- இரவு உணவு: மிகவும் லேசான உணவாகத் தினை (Millets) அல்லது கேழ்வரகு ரோட்டிகளை மட்டுமே இவர்கள் சாப்பிடுகிறார்கள்.
600 ஊழியர்களுக்குச் சுடச்சுட விருந்து!
ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் சிலரே என்றாலும், ஏன் இத்தனை ஆயிரம் ரொட்டிகள்? அங்குதான் அம்பானி குடும்பத்தின் மனிதாபிமானம் ஒளிந்திருக்கிறது. அந்த மாளிகையைப் பராமரிக்கவும், பாதுகாப்பிற்கும் சுமார் 600 பணியாளர்கள் இருக்கிறார்கள். டிரைவர்கள், செக்யூரிட்டி கார்டுகள், துப்புரவுப் பணியாளர்கள் என அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வீட்டு உரிமையாளர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ, அதே போன்ற தரமான மற்றும் சத்தான உணவு தினமும் வழங்கப்படுகிறது. அவர்களுக்காகத்தான் அந்த 4,000 ரொட்டிகள் தயாராகின்றன.
லட்சங்களில் சம்பளம் வாங்கும் சமையல்காரர்!
இத்தனை பேருக்கும் சமைக்க நவீன இயந்திரங்கள் இருந்தாலும், உணவின் ருசி மாறாமல் இருக்கத் திறமையான சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு வேலை பார்க்கும் தலைமை சமையல்காரருக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வேலையில் கச்சிதம், உணவின் தரம் – இதுதான் அம்பானி வீட்டு அடுக்களையின் தாரக மந்திரம்.
ஆரோக்கியமே சொத்து!
ஆடம்பரம் ஒருபுறம் இருந்தாலும், உடல் ஆரோக்கியத்தில் நீதா அம்பானி மிகுந்த அக்கறை காட்டுகிறார். மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே இவர்கள் வெளி உணவுகளை (Junk Food) ருசிக்கிறார்கள். மற்ற நேரங்களில் சுத்தமான, சத்தான வீட்டு உணவே அந்த மாளிகையின் பிரதானம்.
பெரிய மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும், அவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் தங்களைச் சுற்றி இருப்பவர்களைக் கவனித்துக் கொள்ளும் குணம் ஆச்சரியப்பட வைக்கிறது!
