
தமிழ் மக்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக மருத்துவம் சார்ந்த அறிவியல் தகவல்களை வழங்கி வரும் ஹெல்த்கேர் மாத இதழ், மக்கள் நலனில் அக்கறை கொண்டு அனைத்து மருத்துவ முறைகளின் செய்திகளையும் பகிர்ந்து வருகிறது.
எங்கள் நோக்கம்:
மருத்துவ அறிவை எளிய முறையில் அழகு தமிழில் அனைவருக்கும் கொண்டு சேர்த்து, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுதல்.
எங்கள் உள்ளடக்கம்:
- ஆங்கில மருத்துவம்
- சித்த மருத்துவம்
- ஆயுர்வேத மருத்துவம்
- ஹோமியோபதி மருத்துவம்
- இயற்கை மருத்துவம்
- யோகாசனம் மற்றும் பல…
சிறந்த மருத்துவர்கள் வழங்கும் சிறப்புப் பேட்டிகள், ஆராய்ச்சிப் பகுப்பாய்வுகள், மக்கள் பயன்பெறும் சுகாதார தகவல்கள், மருத்துவ புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை எங்கள் இதழின் முக்கிய அங்கமாகும்.
உங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க ஹெல்த்கேர் மாத இதழ் உங்கள் பயணத்தில் தொடரும்!
இந்தப் பத்திரிகை ஒரு சேவையின் அடிப்படையில் இயங்குகின்றது. இதனுடைய வளர்ச்சியில் மருத்துவர்களும்,விளம்பரதாரர்களும்,வாசகர்களும் பக்கபலமாக நின்று உதவுகின்றனர்….