ஒரு சோறு சிந்தினா ஒன்பது நாள் பட்டினி…

ஒரு சோறு சிந்தினா ஒன்பது நாள் பட்டினி…

ஒரு சோறு சிந்தினா ஒன்பது நாள் பட்டினி... இது என்னுடைய சோமு ஆச்சி (பாட்டி) சிறு பிள்ளையில் எனக்கு சோறு ஊட்டி விடும்போது கூறிய அறிவுரை... உணவை வீணாக்கினால் பட்டினி கிடக்க நேரிடும். எப்படி? இன்று அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா...... நமது வீட்டில் இருந்து தினமும் குப்பையை மாநகராட்சி எடுத்துச் செல்கிறது.அதில் மக்கும் குப்பை,மக்காத குப்பை என்று தனித்தனியாக கொடுக்கவேண்டும். நமது வீட்டுக் குப்பைகளில் உணவு தான் அதிகம் உள்ளது. இது நாம் நினைத்து பார்க விரும்பாத குப்பை கொட்டும் இடத்திற்கு கொண்டு சென்று தட்டப்படுகிறது. வெளிநாடான பிரிட்டனில் 200 உணவு குப்பை கொட்டும் கிடங்கு இருக்கிறதாம். இங்கே தட்டப்படும் குப்பை என்னவாகிறது? பாக்டீரியாக்கள் உணவு கழிவின் மீது வேலையை ஆரம்பிக்க அவை அழுகுகின்றன.அப்போது பலவித வாயுக்களும் வெளியாகின்றன.அவற்றில் புவியை வெப்பமாக்கும் வாயுக்களும் உண்டு. நாடு முழுக்
5 சம்ஸ்கிருத உணவும், 6 தமிழ் உணவும்!

5 சம்ஸ்கிருத உணவும், 6 தமிழ் உணவும்!

உணவில் சைவ உணவு, அசைவ உணவு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். குஜராத்தி உணவு, வங்காளி உணவு, தென்னிந்திய சமையல், வட இந்திய சமையல் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளால் உணவு கேள்விப்பட்டது இல்லை அல்லவா? ஆனால் ஏதோ காரணத்தால் சம்ஸ்கிருத அறிஞர்கள் உணவை ஐந்து வகையாகவும், தமிழ் அறிஞர்கள் உண்வை ருசியின் அடிப்படையில் ஆறு வகையாகவும் பிரித்து இருக்கின்றனர்.. நளன், பீமன் போன்ற புகழ் பெற்ற புராண, இதிஹாச சமையல் நிபுணர்கள் “பஞ்ச பக்ஷ பரமான்னம்” படைத்ததாகப் படிக்கிறோம். பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவோர் , அடடா! பஞ்சபக்ஷ பரமான்னம் கிடைத்தது என்பர். அவர்களே தமிழ் உணவு சாப்பிடும்போது அடடா! அறுசுவை உணவு என்பர். அது என்ன பஞ்ச பக்ஷ பரமான்னம்? பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், லேஹ்யம், பேயம் என்று ஐந்து வகையாக பிரித்ததற்குக் காரணம் அந்த உணவும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்
அஸ்வகந்தா

அஸ்வகந்தா

1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா. 2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL. 3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE. 4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி. 5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20 6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள். 7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகி
வானவியலில் சிறந்த சாண வண்டுகள்

வானவியலில் சிறந்த சாண வண்டுகள்

உங்கள் எல்லோருக்குமே சாண வண்டுகளைத் தெரியும் அல்லவா? ஆனால், இந்தச் சாண வண்டுகளுக்கும் வானியலுக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!ன நம்மைப் பொறுத்தவரையில் சாண வண்டுகள் ஒரு அருவருக்கத்தக்க வாழ்க்கையினை வாழும் பூச்சியினம் அவ்வளவுதான். அவை விலங்குகளின் கழிவுகளைச் சேகரித்து பந்து போன்று மாற்றி அதை தன் தேவைகளில் பலவற்றிற்குப் பயன்படுத்திக்கொள்ளும். அந்தச் சாண பந்துகளை அதன் வீடுகளாகவும், முட்டையிடும் இடமாகவும் அல்லது பசிக்கும் நேரத்தில் உணவாகவும்கூட உட்கொள்ளும். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அவை சாணத்தினை உருட்டிக்கொண்டு செல்லும்போது கவனித்துப் பாருங்கள் ஒரே நேர்கோட்டில் செல்லும். அதுவும் இரவு, பகல் என எதுவாக இருந்தாலும் அது உருட்டிச் செல்வது நேர்கோட்டில்தான் இருக்கும். இந்த வித்தியாசமான திறனைக் கவனி
மறைந்து 10 ஆண்டுகள் ஆனது; முதலை வீரனை மறக்க முடியுமா?

மறைந்து 10 ஆண்டுகள் ஆனது; முதலை வீரனை மறக்க முடியுமா?

யானையின் லத்தியில் இருந்து தண்ணீர் குடிக்கும் பியர் கிரில்சுக்கெல்லாம் முன்னோடி ஸ்டீவ் இர்வின். ‘மேன் VS வைல்டு’ அலற வைக்கும் ரகம் என்றால் ‘குரோக்கடைல் ஹன்டர் ‘நாடி நரம்புகளை முறுக்கேற்றி புல்லரிக்க வைத்துவிடும். கையறு நிலையில், வனத்தை எதிர்கொள்வது எப்படி என பியர் கிரில்ஸ் பாடம் எடுக்கிறார் என்றால், கையில் எதுவும் இல்லாமல் வன விலங்குகளை எதிர்கொண்டவர் ஸ்டீவ். சுற்றுச் சூழலுக்கும் வனவிலங்குகளின் உயிர்களுக்கு மதிப்பேயில்லாமல் போன காலக்கட்டத்தில், அவற்றின் அவற்றுக்காகத் தங்கள் உயிரை பணயம் வைத்தவர்கள் இவர்கள். ஒருவருக்கு உயிர் அதிலேயே போய் விட்டது. ”நான் காட்டுக்குள் செல்லும் போது திரும்பி வருவது நிச்சயம் இல்லை ” என பியர் கிரில்ஸ் எப்போதும் சொல்வது உண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வினின் பெற்றோரும் முதலை வேட்டைக்காரர்கள்தான். இர்வினின் பெற்றோர் குயின்ஸ்லாந்தில் பெரீவா என்ற இடத்தில் வ
டாக்சோபிளாஸ்மோசிஸ்

டாக்சோபிளாஸ்மோசிஸ்

கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடையவர்களை தாக்கும் டாக்சோபிளாஸ்மோசிஸ் 1மருத்துவர் சு. பாரதி, 2மருத்துவர் ப. துளசிராமன் மற்றும் 3மருத்துவர் ப. கலைஞன் டாக்சோபிளாஸ்மோசிஸ் (Toxoplasmosis) என்பது பூனைகளிடம் இருந்து பரவும் விலங்கு வழி மனிதர்களுக்குப்  பரவும் நோயாகும். இது டாக்சோபிளாஸ்மா கோன்டை (Toxoplamsa gondii ) எனும் ஒற்றை உயிரணு .ஒட்டுண்ணி உயிரினம் (Protozoa ) மூலம் ஏற்படுகிறது. இந்நோய் தொற்று உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகின்றது. எனினும் சில தனிநபர்களுக்கே இது கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும். இநோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர் கருவில் இருக்கும் குழந்தை, கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ள நோயாளிகள் (Immunological Impaired Patient ). நீங்கள் ஆரோ
மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை!

மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை!

மனித குலத்தையே மாற்றப்போகும் மாத்திரை! ச.நாகராஜன் “30 நாட்களில் உங்களுக்குத் திருப்தி இல்லையெனில் உங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” –  ஜீனியக்ஸ்  மாத்திரையைத் தயாரிக்கும் கம்பெனி உலகின் புரட்சிகரமான மாத்திரை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. பெயர் ஜீனியக்ஸ் (Geniux) .இதைப் பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பிரப்ல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் கூறுகையில், “இது மனித குலத்தையே மாற்றப் போகிறது”  (This pill will change humanity) என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். ஸ்டீபங் ஹாகிங் நரம்பு மண்டலக் கோளாறினால் பேச முடியாமல் அவஸ்தைப் படும் நோயாளி என்பதை உலகமே நன்கு அறியும். மூளையில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க விரும்பும் அவர் இப்படிப்பட்ட நற்சான்றிதழை ஒரு மாத்திரைக்குத் தந்துள்ளார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா! தனது மூளை முன்பை விட கூர்மையாக செயல் பட ஜீனி