நவீன மருத்துவத்திற்கும் வேதம் தான் வழிகாட்டி

ஆயுர் வேதத்தின் சிறப்பு

ஆயுளைப்பற்றியும் நீண்ட பிணியற்ற ஆயுளைப்பற்றியும் விளக்குவதால் இதற்கு ஆயுர்வேதமெனப் பெயர் வந்தது. பிணியைப் போக்குதல் ஆரோக்கிய நிலையில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தைக் காத்தல் எனும் இவை ஆயுர்வேதத்தின் முக்கிய குறிக்கோளாகும். அதர்வவேதத்துடன் ஆயுர்வேதத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இதை அதர்வவேதத்தின் துணை வேதமெனச் சரகர் சுஸ்ருதர் முதலிய ஆயுர்வேத ஆசாரியர்கள் கூறுகிறார்கள்.

காச்யப ஸம்ஹிதையிலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் ஆயுர்வேதம் ஐந்தாவது வேதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதம் என்ற சொல்லுக்கே ஆயுர்வேதம் என்பதுதான் பொருள் என்ற அளவிற்கு ஆயுர்வேதத்தை உயர்த்துகிறார் ஓர் இடத்தில் ஸுச்ருதர். மந்திரம், தந்திரம், வேள்வி, தேவ பூஜை முதலிய சடங்குகளால் பிணிகளைத் தீர்த்த செய்தி வேதங்களில் குறிப் பிடப்பட்டுள்ளதாக இதுவரை அறிந்துள்ளோம். ஆனால் அதர்வ வேதத்தில் பிணி அதைப் போக்கும் மூலிகை அதைப் பயன் படுத்தும் முறை ஆகிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கும் போது மூலிகை மருந்துகளால் பிணிகளைப் போக்கும் ஆயுர்வேத மருத்துவ முறை வேதகாலத்திலேயே ஆரம்பமாகி நம்மால் நன்கு உணர முடிகிறது. அதர்வ வேதத்தில் மட்டுமின்றி எல்லா வேதங்களிலும் ஆயுர்வேதத்தின் செல்வாக்கு மலிந்து கிடப்பதை ஆராய்ச்சியாளர்கள் நன்கு உணர்வர்.
நான்கு வேதங்களிலும் ஆயுர்வேதச் செல்வாக்கு உள்ளதைப் பற்றி பார்ப்போம்.

(அ) ரிக்வேதம்

வேதங்களில் அச்வினிகுமாரர்கள் தேவ மருத்துவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்கள் ததீசி என்பவரின் தலையை வெட்டி அதற்குப் பதில் குதிரைத் தலையை ஒட்டி மறுபடியும் அதையும் நீக்கிப் பழைய தலையையே வைத்ததாகவும், ராஜ கன்னிகையின் ஒடிந்த காலுக்குப்பதில் இரும்புக்காலை இணைத்துச் சரிசெய்ததாகவும், கட்கவான் என்ப வருக்குக் குருட்டுத் தன்மையையும் செவிட்டுத் தன்மையையும் போக்கியதாகவும், பூஷா என்பவரின் உடைந்த பல்லை நீக்கிப் புதிதாகப் பல்லைக் கட்டிச் சரிசெய்ததாகவும், சயவனமகரிஷியின் முதுமையை நீக்கி இளமையையும் நீண்ட ஆயுளையும் அளித்த தாகவும், வத்ரிமதி என்பவருக்கு மலட்டுத் தன்மையை நீக்கி மகப்பேற்றை அளித்ததாகவும் வரலாறு காணப்படுகிறது. அதே ரிக்வேதத்தில் அபாலா என்பவரின் தோல் வியாதியையும் ஸ்ரோணா என்பவருடைய நொண்டித் தன்மையையும், பராவ என்பவருடைய கண்பிணியையும் இந்திரன் போக்கிய தாகச் செய்தி உள்ளது. இவை யாவும் மந்திர தந்திர பலன்களின்றி மருத்துவ முறையைக் கையாண்டு இச்சாதனைகளைப் புரிந்ததாகத்தான் நன்கு தெரியவருகிறது. ஏனெனில் பிணியைக் கூறி அதைப் போக்கும் மருந்தைக் கூறியிருப்பதால் மருத்துவம் செய்து தான் பிணியைத் தீர்த்தார்கள் என்பது நன்கு விளங்கவில்லையா? அவ்விடங்களில் தங்கள் தவவலிமை யால் இப்பிணிகளைப் போக்கியதாகக் காணவில்லை. இருந்தால் மற்ற
இடங்களைப் போல் இங்கும் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லவா? தவிர பிற பிராணிகளின் உறுப்புகளைச் சேர்த்துப் பிணியைப் போக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி என்ற விஞ்ஞானக் காலத்தில் செய்து வரும் மருத்துவம் ரிக்வேத காலத்தில் அச்வினி குமாரர்களால் முன்பே துவக்கி வைக்கப்பட்டது என்பதை அறியும் போது நவீன மருத்துவத்திற்கும் வேதம் தான் வழிகாட்டி என்று திட்டவட்டமாகக் கூறலாம்

ரிக்வேதம் வாத பித்த கபம் எனப்படும் அடிப்படையான மூன்று தோஷங்களை ”திரிதாது என்ற சொல்லால் விளக்கு வதை காணலாம். இந்த மூன்று தோஷம் என்ற முறை ஆயுர்வே தத்திற்கே உரியது.