தூரிகை வரையும் மின்மினிகள்”ஹைக்கூ கவிதை நூல் இலங்கையில் வெளியீடு

டாக்டர் ஜலீலா முஸம்மிலின்
“தூரிகை வரையும் மின்மினிகள்”
ஹைக்கூ கவிதை நூல் இலங்கையில் வெளியீடு

டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா 28/10/2023 சனிக்கிழமை மாலை ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம். மஹ்பூழ் தலைமையில் நடைபெற்ற இந் நூல் வெளியீட்டு விழாவில், ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.கௌரவ அதிதிகளாக கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எச். முஸம்மில்,சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய அதிபர் ஜனாபா றிப்கா அன்சார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது நூலாசிரியர் டாக்டர் ஜலீலா முஸம்மில் தனது அன்புத்தாயார் ஹாஜியானி சித்தி பௌசியா ஹயாத்துமுஹம்மதுவிடம் நூலின் முதற் பிரதியைக் கையளித்தார்.ஏறாவூர் ஓய்வு நிலை கோட்டக்கல்வி அதிகாரி கவிமணி எஸ்.ஏ. றஸாக் (கனல்கவி) நூல் பற்றிய நயந்துரையையும், மட்டக்களப்பு அஞ்சற்பயிற்சிக் கல்லூரி போதனாசிரியர் கே. பாத்திமா ஹஸ்னா நூல் பற்றிய ரசனையையும் வழங்கினார்கள்.

எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *