சோம்பலைப் போக்கும் தனுராசனம்

​தனுராசனம்
​யோக ஸ்ரீ.ராமசாமி​
நாம் உயிர் வாழ்வதற்கு வைட்டமின் உயிர்ச்சத்து இன்றியமையாதது தெரிந்ததே. ஆனால் நாம் உட்கொள்ளும் ஆகாரத்தில் வைட்டமின்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையும் திடகாத்திரமாக வாழ்க்கை நடத்துவதற்கு நாம் உட்கொள்ளும் ஆகாரத்தில் வைட்டமின்கள் எந்தெந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்பதையும் நம்மில் நன்கு உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம்.

நம் உடல் வளர்ச்சியில் வைட்டமின் ஏ செய்து வரும் வேலை மகத்தானதாகும். வழக்கமாக சாப்பிடும் ஆகாரத்துடன் வைட்டமின் ஏ சிறிது அதிகமாக சேர்த்து உட்கொண்டால் ஆயுள் விருத்தி அடைகிறது. அதாவது இளமைப் பருவம் மேலும் பத்து வருட காலம் நீண்டு இருக்கும். வைட்டமின் ஏ பப்பாளிப்பழம், மாம்பழம், வாழைப்பழம், பால், முலாம்பழம், பேரிச்சம்பழம், ஆரஞ்சு முதலியவற்றில் நிறைய இருக்கின்றது. பசலைக்கீரை, டர்னிப்,லெட்டூஸ், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், அவரை, தக்காளிப்பழம் முதலியவற்றிலும் வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த உயிர்ச்சத்து ஏ ஓரளவுக்கு உடலில் சேமித்து வைத்திருக்கப்படுகிறது.

செய்முறை :

விரிப்பின் மீது குப்புறப்படுக்கவும். படத்தில் உள்ளது போல் கைகள்,கால்களைமடிக்கவும். குதிரை போன்ற மரப்பொம்மை கைகள் கால்களை எப்படி முன்னும் பின்னும் அசைக்குமோ அவ்வாறே முன்னும் பின்னும் உடம்பை அசைக்கவும். உங்கள் எடை முழுவதும் வயிற்றில் இருப்பது போல் அசைக்கவும். இதுபோல் 10 முறை செய்யவும்

பலன் :

மாணவர்களுக்கு எதிர்காலச் சோம்பலை நீக்கி ஞாபகசக்தியை கொடுக்கும். கவனமின்மை, அடிக்கடி கோபம் கொள்ளுதல் ஆகியவற்றை போக்கும். பிடிவாத குணம் நீங்கி மன அமைதி உண்டாக்கும் பெண்களுக்கு பிரசவித்த பின் ஏற்படும் வயிறு பெருத்தலை தவிர்க்கும் மாதவிடாய் கோளாறுகளை நீக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *