மருத்துவக் காப்பீடு ஒரு முதலீடு… செலவு அல்ல.

கூடுதல் பலன்களை வழங்கும் மருத்துவக் காப்பீடு “ரைடர்”

நமக்கு நேரக் கூடிய அதிகப்படியான மருத்துவ செலவுகளை  குறைக்க உதவுபவைதான் ரைடர்ஸ்.!!

பாகம் – 5


  • ரவிச்சந்திரன், புதுச்சேரி

நாம் ஹோட்டலுக்கு போனால் மெனு கார்டில்,  சைட் டிஷ், விலைபட்டியல் எல்லாம் நன்றாகப் பார்த்து உணவு ஆர்டர் பண்றோம்?! அதே மாதிரி மருத்துவப் பாலிசி எடுக்கும் போதும் அதே கவனத்துடன் பாலிசியுடன் இணைந்த ரைடர்களை (Riders) சரியாகத் தெரிவு செய்ய வேண்டும். அப்படி ரைடர்களை சரிவர தெரிவு செய்தீர்கள் என்றால் சிகிச்சையை ஒட்டிய வேறு சில நல்ல பலன்கள் கிடைக்கும். மற்றும் அதிகப்படி  செலவுகள் நாம் செய்யாமல் பாக்கெட்டை பாதுகாக்கலாம்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்  வழங்கும் மருத்துவப் பாலிசியுடன் இணைந்த  எல்லா ரைடர்களையும் போட வேண்டியதில்லை. ஒருவரின் பாலிசி தேவைகளை அனுசரித்து ரைடர்களை தெரிவு செய்ய வேண்டும். வயதைப் பொறுத்து தேவைகளைப் பொறுத்து ரைடர் களை நாம் தெரிவு செய்து கொள்ளலாம்.

1.Maternity, New born baby Riders

21 வயது முதல் 45 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் இந்த ரைடர் எடுத்துக் கொண்டால் பிரசவம் சார்ந்த செலவினங்களை இந்த ரைடர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பேறுகால சிகிச்சை, ஸ்கேன் டெஸ்ட், பிரசவித்தல், சிசேரியன் பிரசவம், New born baby coverage, Baby vaccination குழந்தை தடுப்பூசி போன்றவற்றிற்கு இந்த ரைடர்  உதவுகிறது. 

2. Reduced Pre Existing Disease waiting period  Rider

 உடல் நலப்  பிரச்னை  உள்ளவர்கள், உடனடி சிகிச்சை பெறுவதற்கு இந்த ரைடர் மூலம் முடியும். இதனால் மூன்று வருடம் நான்கு வருடம் காத்திருப்புக் காலம் குறைத்து  காப்பீடு பலன் பெற முடியும்.  

 3. கோ – பே:Co-Payment Rider

சில காப்பீடுகளுக்கு கோ பே (co-payee)  மூலம் பகுதி மருத்துவ செலவு நாம்  செய்ய வேண்டும்.  கோ பேமென்ட் ரைடர்  இருந்தால்  கையிலிருந்து செலவு செய்யாமல் முழு செலவும் பாலிசி மூலம் ஏற்பார்கள் அல்லது பிரிமியம் குறைத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சையில் பகுதி செலவை நாம் கட்டிக் கொள்ளலாம்.

4. ஆபத்து நோய்களுக்கு: 

Critical Illness Rider 

உயிருக்கு ஆபத்தான புற்றுநோய், மாரடைப்பு, ஸ்ட்ரோக், இதெல்லாம் பாதிக்கும்போது உடனடியாக பிரத்தியேக சிகிச்சை தேவைப்படும். அதனால் பொருளாதார இழப்புகளையும் சந்திக்க நேரிடும். நான்தான் மருத்துவக் காப்பீடுதான் எடுத்திடுக்கிறேனே.. ,அப்புறம் எதற்கு critical illness rider? என்று தோன்றும். இதயம்,, மூளை நரம்பியல், கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய் போன்ற 36 வகை ஆபத்தான critical illness பிரச்னைகள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள்.  இவை பாதித்தால் மருத்துவப் பாலிசி இருந்தாலும் கூடவே இந்த Rider இருந்தால் உடனடியாக உங்களின் பொருளாதார நெருக்கடியிலிருந்து காத்து உதவும். நோயாளி வங்கி கணக்கில் பணமாகக் கிடைக்கும்.

5. தினசரி இதர செலவுக்கு:
Hospital Cash Rider

இந்த ரைடர் இருக்குமானால் மருத்துவ மனையில் சேர்ந்தவரின் அல்லது உடன் இருப்பவர்களின் தினசரி செலவுக்கு உதவும் வகையில் உங்கள் காப்பீடு திட்டம் பொறுத்து 500 (அ)1000 ரூபாய் கொடுப்பார்கள்.

6.Consumable Cover Rider

 மருத்துவ மனையில் சிகிச்சைக்கு பல மருத்துவ உபயோகப் பொருட்கள் பயன்படுத்துவார்கள். PPE kit, கையுறைகள், காலணிகள்,மாஸ்க்,ஊசி சிரிஞ்சுகள்லாம் உபயோகிப்பார்கள். இந்த செலவுகள் இந்த காப்பீடு ரைடரின் மூலம் ஏற்கப்படும்.

7. ரூம் வசதி: Room Rent Waiver Rider

மருத்துவமனையில் சேர்கையில் நாம் எடுத்த பாலிசியைப் பொறுத்து தான்  அறை வழக்கமாக ஒதுக்குவார்கள். சிங்கிள் ஏசி, டபுள், நாலு பேர் ஷேரிங் இப்படி பாலிசி விதிப்படி ஒதுக்குவார்கள்.இந்த ரைடர் இருந்தால் நல்ல ரூம் மேம்பட்ட வசதிகள் பெறலாம் .

8. விபத்துக்காப்பீடு:
Personal Accident Cover Rider

இந்த ரைடர் பாலிசி எடுத்த  குடும்பத்தலைவர், அவர் குடும்ப வருவாய் ஈட்டுபவராக இருக்கும் நிலையில் இந்த Personal AccidentCover Rider அவருக்கு எடுத்துக்கொள்ளலாம். அப்படி அவர் கவரேஜ் எடுத்து அவருக்கு விபத்து மூலம் இறப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு அவர் எடுத்த விபத்துக் காப்பீடுத் தொகை கிடைக்கும்.   

9. வெளிப்புற சிகிச்சை:
Out Patient Department Cover Rider

மருத்துவ பாலிசி பலன்களுக்கு 24 மணி நேர” உள் நோயாளியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வெளிப்புற நோயாளியாக டாக்டர் கன்சல்டேஷன் பார்ப்பது,, லேப் டெஸ்ட் , ஸ்கேன் டெஸ்ட் எடுப்பது, மருந்துக்கடையில் மருந்து வாங்கி செலவு செய்ய இந்த ரைடர் உதவும்.

10. No Claim Bonus Rider

மருத்துவ பாலிசி எடுத்து ஒரு வருடம் எந்த கிளெய்மும் பண்ணவே இல்லை எனும் பட்சத்துல இந்த No Claim Bonus Rider இருந்தால் அடுத்த ஆண்டில் பத்து முதல் நூறு சதவீதம் வரை காப்பீட்டுத் தொகையில் போனசாக கிடைக்கும் .

11. Deductible Rider

மருத்துவக் காப்பீடு எடுப்பவர் எனக்கு வழங்கும் காப்பீடு தொகையில் ஒரு பகுதி, குறைத்தே (deductible) கொடுங்கள் என்று தெரிவு செய்ய இந்த ரைடர் உதவுகிறது.. இது ஒரு விதத்தில் பிரிமியம் தொகை செலுத்துவதில் சலுகை பெற உதவுகிறது.

12. வீட்டிலேயே தங்கி சிகிச்சை:
Home Care Treatment Rider

காப்பீடு எடுத்த ஒருவருக்கு இரண்டு மூன்று முறை அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை வருவதுண்டு. மூன்று மாதம் ஆறு மாதம் வரை அந்த தொடர் சிகிச்சை அவசியப்படலாம். அதற்காக பல மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தால் சிகிச்சை செலவும் பன்மடங்காகி விடும். அதனால் வீட்டில் நர்ஸ் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை தொடர அனுமதிப்பார்கள். இப்படி வீட்டில் சிகிச்சை எடுப்பதற்காகும்  செலவு, நர்சிங் செலவுகள் இவற்றுக்கும் இந்த ரைடர் மூலம் சிகிச்சை தொகை பெற முடியும்.

13. வருடாந்திர உடல் பரிசோதனை:
Annual Health Check up Rider

மருத்துவக் காப்பீடு தனி நபர் எடுத்தாலும் குடும்ப காப்பீடு எடுத்தாலும் வருடாந்திர மருத்துவப் பரிசோதனை காபீட்டின் ஒரு அங்கமாக வழங்குவார்கள். சில காப்பிட்டில் அது போல் வழங்கவில்லை என்றால் வருடாந்திர பரிசோதனை நமக்குத் தேவையானபடி ரைடராக இணைத்துக் கொண்டு பெற முடியும்.

14. நவீன சிகிச்சை:
Modern Treatment Riders

நாள் தோறும் புதுப்புது நவீன மருத்துவ சிகிச்சை முறைகளுடன் மருத்துவத்துறை முன்னேறி வருகிறது. ரோபாட்டிக் சர்ஜரி, ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் இணைந்த சிகிச்சை இவையெல்லாம் புதிய நவீன சிகிச்சை முறைகளாக இன்ஷூரன்ஸ் காப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது இப்படிப்பட்ட நவீன சிகிச்சைகள் நீங்கள் இணைந்த காப்பீட்டு திட்டத்தில் இல்லையென்றாலும் இந்த ரைடர் மூலம் அதை நீங்கள் பெறலாம்.

15. Air Ambulance Rider

 அவசர சிகிச்சையின் போது  சில சமயங்களில் ஒரு நோயாளியை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு Air Ambulance மூலமாக கொண்டு செல்ல வேண்டிய நிலை வரலாம். சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா இது போன்ற பெரிய நகரங்களில் இந்த மாதிரி ஏர்- ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல வசதிகள் இருக்கின்றது அப்படிப்பட்ட ஒரு நிலை வருமானால் இந்த ஏர் ஆம்புலன்ஸ் ரைடர் மூலமாக அந்த வசதியை நாம் பெற முடியும் . 

16. இந்திய மருத்துவ முறை சிகிச்சை:
Ayush Rider

நவீன மருத்துவ சிகிச்சை மூலம் சில பிரச்சனைகள் சரியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இயற்கை முறையிலான சித்த மருத்துவம்,  ஹோமியோபதி,, யுனானி போன்ற மருத்துவ முறைகளை எடுத்துக் கொள்ள நேரிடலாம்.  இந்த ஆயுஷ் சிகிச்சை முறைகளுக்கும் ஆயுஷ் ரைடர் மூலமாக நாம் பயன் பெற வாய்ப்புள்ளது.

17. மறுபடி மறுபடி ரிபீட் தான்:
Restoration of Sum Assured Rider

 இது முக்கியமான ரைடர் ஆகும். ஏனென்றால் இந்த ரைடர் உங்கள் காப்பீடு பயனை திரும்பத் திரும்ப பெறுவதை உறுதிப்படுத்தும் ரைடர்.   இந்த ரைடர் மூலமாக ஒருவரின் காப்பீட்டுத் தொகை ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்குப் பிறகும் காப்பீட்டுத் தொகை அளவு குறையாமல் பாதுகாக்கிறது.

18. நலம் நாடுவோர்: Wellness Rider

 வெல்னஸ் ரைடர் என்பது ஃபிட்னஸ் ஃப்ரீக் (Fitness Freak), உடல் ஆரோக்கியத்தை சிரத்தையோடு பராமரிப்பவர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள்…..இவர்களுக்கு உபயோகமான ரைடர் ஆகும். இந்த ரைடர் எடுப்பவர், அவருடைய தினப்படியான பயிற்சி செய்வதுடன், ஹெல்த் கிளப் உறுப்பினராக இருக்கிறாரா?. சைக்ளோத்தான், மராத்தான், வாக்கத்தான் பந்தயங்களில் கலந்து கொள்பவராக இருப்பவரா?   வெல்னஸ் புரோகிராம் ஆப்கள் பதிவின்  மூலமாக அவருடைய தினசரி பயிற்சி பாராமீட்டர்களை பதிவிடுபவரா? சைக்கிளிங், நடைப்பயிற்சி எல்லாம் பதிவு செய்கிறாரா? அப்படி செய்பவராக இருந்தால் ஹெல்த் செக்கப் பண்ணி அவருக்கு இன்ஷூரன்ஸ் பிரிமியத்தில் இந்த ரைடர் மூலமாக   5% முதல் 20% வரை தள்ளுபடி கிடைக்கும்.

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

– பாரதியார்

admin
Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *