ச.நாகராஜன்
உடல் ஆரோக்கியம் சற்று சரியாக இல்லை என்றால் தான் டாக்டரிடம் செல்கிறோம்.
உரிய சிகிச்சை அளிக்க தேவையான சில சோதனைகளை டாக்டர் பரிந்துரைக்கிறார்.
இதில் முக்கியமான சோதனை இரத்த பரிசோதனை.
இந்தக் காலத்தில் ஏராளமான நுட்பமான சோதனைகள் நடைமுறைக்கு வந்து விட்டன.
அவை டாக்டருக்கு உரிய சிகிச்சையை திறம்படச் செய்ய உதவுகிறது.
டாக்டரின் பரிந்துரையின் பேரில் லாப்-க்கு சென்று ரத்த சோதனையை வருடத்திற்கு ஒரு
முறையாவது எடுப்பது நல்லது.
இப்போது பத்து சோதனைகள் நடைமுறைக்கு வந்து விட்டன.
அவற்றைப் பற்றிய ஒரு சிறிய பார்வை இதோ:
1.CBC -Complete Blood Count
இது சகஜமாக பரிந்துரைக்கப்படும் ஒரு சோதனை. நமது இரத்த திசுக்கள் நம்மைப்
பற்றிய ஏராளமான விவரங்களைத் தந்து விடும். தொற்று, வீக்கம் பற்றிய
முக்கிய விவரங்களை இது தந்து விடும். சில மைக்ரோ
நியூட்ரியண்ட்ஸ் நமது உடலில் இல்லையெனில் இது சரியான
குறிப்பைத் தந்து விடும். இது நீடித்த ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கிய
வாழ்க்கையைக் கொள்வதற்குமான ஒரு சோதனை.
- CMP – Comprehensive Metabolic Panel
சி எம் பி என்ற பெயரே கூறுவது போல இது ரத்த சோதனைகளின்
ஒரு க்ரூப் அல்லது குழு ஆகும். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகம்
எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைத் தெரிவித்து விடும்.
அது மட்டுமல்ல இரத்த சர்க்கரை அளவு, புரோட்டீன் அளவுகள்,
மொத்த அமிலங்கள் ஆகியவற்றையும் பற்றித் தெரிவித்து உடலைப்
பற்றிய முழு விவரத்தையும் தந்து விடும். டயபடீஸ், உயர் இரத்த
அழுத்தம், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு இருந்தாலும் தெரிந்து விடும்.
சில நாடுகளில் இந்த சோதனை நடைமுறைக்கு வரவில்லை.
அவர்கள் தனித்தனியாக சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது
தான். இந்த சோதனை 14 BIO MARKERS எனப்படும் உயிர் காட்டிகளைக்
கொண்டுள்ளது. அவையாவன :குளுகோஸ், கால்சியம், அல்புமின்,
புரோட்டீன், சோடியம், பொடாஸியம், க்ளோரைட், பைகார்பனேட்
(கார்பன் டை ஆக்ஸைடு) AST, ALT, ALP, பிலிருபின், BUN (Urea) மற்றும்
க்ரியாடினைன் (Creatinine)
3.லிபிட் பேனல் (கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசெரைட்ஸ் (Lipid Panel
- Cholesterol and Triglyserides)
இந்த சோதனை ஒருவரின் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசெரைட்
அளவுகளைத் தந்து விடும். இது இதய நோய் பற்றி அறிய உதவும்.
நல்ல கொலஸ்ட்ரால் – HDL என்று அறியப்படுவது அதிகமாகவும்
கெட்ட கொலஸ்ட்ரால் – LDL என்று அறியப்படுவது குறைவாகவும்
இருப்பதை உறுதி செய்து விடும்.
- HbA1c
ரத்த குளுகோஸ் சோதனையானது தற்போதைய குளுகோஸ்
அளவைத் தெரிவிக்கும். சென்ற மூன்று மாதங்களில் இருந்த ரத்த
சர்க்கரையின் சராசரி அளவை HbA1c தெரிவிக்கும். வருடத்திற்கு ஒரு
முறை இந்த சோதனை தேவை. டயபடீஸ் பாதிப்பு உள்ளவர்கள்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த சோதனையை மேற்கொள்ள
வேண்டும். - Hs – CRP
C-reactive Protein CRP என்பது ஒரு தொற்று ஏற்படும் போது
பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்து போராடும். உடல்
எடை அதிகமாக இருந்தாலோ, அதிக ரத்த அழுத்தம், டயபடீஸ் ஈறு
சம்பந்தமான நோய் இருந்தாலோ உடல் பயிற்சி மேற்கொள்ளாமல்
இருந்தாலோ இது அதிகமாக இருக்கும். மேலும் இது இதய நோய்
அபாயத்தையும் தெரிவித்து விடும். CRP மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய
இரண்டும் அதிக அளவு இருந்தால் இதய சம்பந்தமான அபாயம் கூடி
விடும். ஆகவே இந்த சோதனை முக்கியமான ஒன்று. 6, விட்டமின் D (25 Hydroxy Vitamin D)
உடல் சோர்வு, வலி ஆகியவற்றிற்கான காரணம் உடலில் விட்டமின்
டி – இன் பற்றாக்குறை தான். சாதாரணமாக வெயிலில் கிடைக்கும்
விட்டமின் இது. சில உணவுகளும் துணை உணவுகளும் எடுத்துக்
கொண்டால் இந்தக் குறை நீங்கும். - இரும்புச் சத்து / Ferritin
போதிய அளவு உடலில் இரும்புச் சத்து இல்லையெனில் ரத்த சோகை
எனப்படும் anemia ஏற்படும். ஆகவே இதை சரி பார்ப்பது அவசியம். - GGT
கல்லீரல் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய உதவும் ஒரு
என்ஜைம் தான் GGT. என்றாலும் கூட இது CMPஇன் ஒரு அங்கம் தான். - யூரிக் அமிலம்
அதிக அளவு யூரிக் அமிலம் இருந்தால் சிறுநீரக கற்கள் தோன்றும்.
இதய நோய் மற்றும் டயபடீஸ் அபாயத்தைக் கூட்டும். ஆகவே இது
சரியாக இருக்க வேண்டும். - தைராய்ட் ஹார்மோன்கள் (Thyroid Hormones – TSH
Metabolism எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தைக்
கட்டுப்படுத்துவது தைராய்ட் ஹார்மோன்கள் தாம். இது
கொலஸ்ட்ரால் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தைராய்ட் சரியாக
வேலை செய்கிறதா என்பதைப் பார்க்க இந்தச் சோதனை மிக
அவசியம்.
ஆக டாக்டரின் பரிந்துரையின் பேரில் இந்த பத்து
சோதனைகளையுமோ அல்லது தேவையானவற்றை மட்டுமோ
வருடத்திற்கு ஒரு முறை மேற்கொண்டு உங்கள் உடல் நிலையைப்
பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.
வந்த பின் நோவதை விட, வருமுன் காப்பதே சிறந்ததல்லவா!