Home கட்டுரைகள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள்.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள்.

546
0

கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள்.

மறைந்து நின்று தாக்குதல் என்பது சமாளிக்க முடியாத ஒன்று தான். கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் அதுவும் மனித குலத்தின் மீது தாக்குதல் என்பது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று தான்.

நமது ஊரில் திடிரென்று மக்களில் பலருக்கும் காய்ச்சல் பரவினால் அதனை மர்மக் காய்ச்சல் என்று பெயரிட்டு அழைப்பர். அதுவே வெளிநாடாக இருந்தால், சார்ஸ்,H1N1, COVID-19 (கரோனா வைரஸ் தான்) என்று வைரஸ் நாமகரணம் சூட்டிவிடுவார்கள்.

மருத்துவ உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு தலைவலி தான். அந்த வைரஸ்  எந்தக் குடும்ப வகையைச் சார்ந்தது? அதன் பின்புலம் என்ன என்று ஆராய்வதற்குள் ஆயிரம் பேரை அது காவு கொண்டிருக்கும்.

இன்றைய உலகில் 3 விஷயங்கள் பின்பற்றவேண்டும்.

1.சுகாதாரம் 2.உணவுப் பழக்கம் 3. தீயன கண்டு அகலுதல்.

சுகாதாரம்:

மருத்துவர்கள் அடிக்கடி அறிவுறுத்துவது கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் என்பதே. வெளியில் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பினால் முதலில் கை,கால்களை முடிந்தால் உடலினை நீரினால் சுத்தம் செய்யும் பழக்கத்தை பழகுவோம்.

வள்ளுவரும்

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
(அதிகாரம்:வாய்மை குறள் எண்:298)

என்று வலியுறுத்துகிறார்.அதனால் உடல் சுத்தம் பேணுவோம்.

2.உணவுப் பழக்கம்:

நாம் உயிர் வாழ காய்கறிகள்,தானியங்கள்,மற்றும் பழங்கள்  என்பன இருக்கிறது அதைக் கொண்டு உயிர் வாழலாம் என்கின்ற சிந்தனை வரவேண்டும். அசைவ உணவுப் பிரியர்கள் பெரும்பாலும் அசைவ உணவினை சுவைக்காக மட்டுமே உண்கின்றனர். சுவையை விட உடல் ஆரோக்கியம் முக்கியம் தானே. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். விதவிதமான உயிர்களைக் கொன்று அதன் சுவையை ஒரு கை பார்க்கவேண்டும் என்ற சீனர்களின் எண்ணமே இன்று அவர்களுக்கு மரணபயத்தைக் காட்டிவிட்டது.

வள்ளுவரும்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:260)

என்று வலியுறுத்துகிறார்.அதனால் உணவில் மாற்றம் கொண்டுவருவோம்.

  1. தீயன கண்டு அகலுதல்:

உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பது தீய பழக்கமே ஆகும். ஆகவே மதுப்பழக்கம்,புகைப்பழக்கம்,போதைப் பழக்கம் இவை எல்லாம் தீயன என்று கண்டு கொண்டு அப்படிப்பட்ட பழக்கம் உள்ளவர்களுடன் இணக்கம் கொள்ளாது அகன்று விடவேண்டும்.மருத்துவ உலகமும் அதையே தான் சொல்கிறது…புகைப்பவரது அருகில் நீங்கள் நின்று கொண்டு இருந்தாலும் அது உங்களுக்கும் தீயவற்றையே ( Passive Smoking ) பரிசாக அளிக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

வள்ளுவரும்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
(அதிகாரம்:தீவினையச்சம் குறள் எண்:202)

என்று வலியுறுத்துகிறார்.அதனால் தீயன கண்டு அகலுதல் வேண்டும்.

இது இன்றைய கால கட்டத்தில் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து அனைவரது மனதிலும் பசுமரத்து ஆணி போல பதிய வைக்கவேண்டும்.

இந்த இதழில் இடம் இல்லாததால் உடலுக்கு நலம் நல்குவது நல்ல தண்ணிரா? உப்புத் தண்ணீரா என்ற கட்டுரை அடுத்த இதழில் வெளிவரும்.

-ஆசிரியர்.

(editor@tamilhealthcare.com)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here