மீளாத் துயிலில் ஆழ்த்திவிடும் நீள் துயில் கொள்ளும் கொசுக்கள்

0
15
S

மீளாத் துயிலில் ஆழ்த்திவிடும் நீள் துயில் கொள்ளும் கொசுக்கள்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது போய் கொசு என்றால் உலகம் நடுங்கும் என்றாகிவிடும் போல் தான் உள்ளது. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணக்கூடாது என்று சொல்வார்கள். அதெல்லாம் மனுஷனுக்குப்பா எங்களுக்குக் கிடையாது என்று அசால்ட்டாக கொசுக்கள் சொல்கின்றன.

இன்று உலகில் கொசுக்களில் 3500 சிற்றினங்கள் உள்ளன. இவற்றில் எல்லா கொசுக்களும் நோய்பரப்புவது கிடையாது. மொத்த உலகத்திலும் முக்கியமான கொசு இனங்கள் மூன்று! அவை கியூலெக்ஸ் , அனோபீலிஸ் மற்றும் ஏடீஸ் .

பெண் கொசுக்கள் மட்டுமே விலங்குகள்,பறவைகள்,மனிதர்களின் ரத்தத்தை உறுஞ்சுகின்றன.ஏனெனில் இந்த பெண் கொசுக்கள் தன்னுடைய இனத்தை விருத்தி செய்யவேண்டும் என்கின்ற எண்ணமே. கொசுக்கள் உறுஞ்சும் மனித,விலங்கு ரத்தத்தில் அவை முட்டையிடத் தேவையான புரதப் பொருட்களையும்,இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது.ஒரு கொசுவினுடைய எடை 2.5 கிராம். கொசுவானது ஒரு தடவை நம்மை கடிக்கும் போது நம் இரத்தத்தின் ஒரு துளியில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே உறிஞ்சுகிறது.

ஆண் கொசு சராசரியாக ஒரு வாரம்தான் வாழும் ஆயுளுடையது. அது முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்ளும். அது முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கிறது.

ஆனால் பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதம் உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும். அப்படி முட்டையிடுவதற்கு முன் குளிர்காலம் வந்துவிட்டால், ஏதாவது ஓர் இடுக்கில் நீள்துயிலில் ஆழும். அது நான்கைந்து மாதங்கள்கூட நீடிக்கலாம். முட்டையிடுவதற்கு உகந்த சமயம் வந்ததும்,அதுவரை ஆழ்துயிலில்உள்ள பெண் கொசு முழித்து முட்டையிடப் போகும்.

கொசுவை அழிக்க முடியாத அரசுகளைக் கண்டிப்போர் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியது:

ஒரே சமயத்தில், ஒரு கொசு சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது.

எல்லாக் கொசுக்களும் நோயைப் பரப்புவது இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகை இனங்கள் தான்.

கியூலெக்ஸ் கொசு:

வெஸ்ட் நைல் வைரஸ், பிலாரியஸிஸ், ஜப்பானிஸ் என்செபலிடிஸ், செயின்ட் லூயிஸ் என்செபலிடிஸ், யானைக்கால்வியாதியை உண்டாக்கும் வைரஸ்களை பரப்புகிறது.

அனோபீலிஸ் கொசு :

மலேரியாவைப் பரப்புகிறது.

ஏடீஸ் கொசு:

டெங்கு, சிக்குன் குன்யா, ஸிகா ஆகிய வைரஸ்கள் அனைத்தும் ஏடீஸ் என்று அழைக்கப்படும் கொசுக்களின் மூலம் பரவுகிறது.

கொசுக்கள் பரப்பும் கொடிய நோய்களில் ஒன்றான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் குறித்த ஒரு விழிப்புணர்வுக் கட்டுரையை இந்த இதழில் வெளியிடுகிறேன். இந்த சமயத்தில் இதை வெளியிடக் காரணம் கடந்த மாதம் இந்தியாவில் கோரக்பூரில் 60 குழந்தைகள் ஆக்சிஜன் இன்றி உயிர்விட்டது. உயிர் இழந்தக் குழந்தைகளில் பலருக்கு இந்த ஜப்பானிய மூளைக் காய்ச்சல் இருந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பசுக்களை கொல்வதை விட்டுவிட்டு

குழந்தைகளின்  உயிர் குடிக்கும் கொசுக்களை ஒரு கை பார்ப்போம் வாருங்கள்…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here