உயிர் காக்கும் உதிரப் பரிசோதனைகள்

0
20

மிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே,மக்கள் காய்ச்சல் என்றாலே அலறத் தொடங்கிவிட்டனர்.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் காய்ச்சல் என்று தான் மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவர் மீண்டு வாராமலே சென்றுவிட்டார்.

காய்ச்சலுக்கு முன் அனைவரும் சமமே என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துவிட்டனர்.பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற நிலை மாறி காய்ச்சலென்றாலே குலை நடுங்கும் பயந்தநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர் என்பதே உண்மை.

ரெண்டு நாளா காய்ச்சலா இருக்கு…..மாத்திரை சாப்பிட்டும் கேக்கல………இந்த டாக்டர் சரி இல்ல…அடுத்த டாக்டர் கிட்ட போவோம். இது தான் மக்களில் பெரும்பாலானவர்கள் எடுக்கும் முடிவு.

காய்ச்சல் என்று சொன்னவுடன் இதுதான் என்று உடனடியாக யாராலும் கூறிவிட முடியாது.வைரஸ் காய்ச்சலா,பாக்டீரியா காய்ச்சலா என்பதை மூன்று தினங்கள் காத்திருந்து மருந்துகளுக்கு அவை கட்டுப்படுகிறதா? அதன் அறிகுறிகள் என்ன என்பதைக் கண்டறியவேண்டியுள்ளது.

ஃப்ளு,டைஃபாய்டு,நிமோனியா இது போன்ற காய்ச்சல்கள் விடாமல் அடிக்கும். உடல் அனல் போல் கொதிக்கும்.

மலேரியா காய்ச்சல் விட்டுவிட்டு வருவதுடன் உடலில் ஒரு நடுக்கமும் இருக்கும்.

புற்றுநோய்,எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்களும் காய்ச்சலில் தான் தொடங்குகின்றன.

சிலவகை காசநோய்களுக்கு மாலையில் மட்டும் காய்ச்சல் வரும்.

பூட்டிய வீட்டிற்குள் திருடன் வந்தால் நாம் எப்படி கூப்பாடு போடுவோமோ அதே செயலைத்தான் நமது உடல் செய்கிறது.வைரஸ்,பாக்டீரியா,பூஞ்சைத் தொற்றுக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து உள்ளதை உங்ளுக்குத் தெரிவிப்பதே காய்ச்சல். அந்த அந்நியக்கிருமிகளைக் கொல்ல ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

உடலில் தாங்கக்கூடிய நிலைக்கு மேலே செல்லும் போது தான் நாம் மருந்து,மாத்திரைகளின் உதவியுடன் காய்ச்சலை விரட்டுகிறோம்.

ரத்தப் பரிசோதனைகளின் முடிவுகளில் உடலுக்குள் உள்ளது என்ன கிருமி என்று கண்டறியப்பட்டு அதற்க்கான மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகிறது.

முள்ளை முள்ளால் எடுப்பது போல் நமது உடல் செல்களைப் பாதிக்கும் பாக்டீரியாக்களின் உடல் செல்களை குறிவைத்து ஆன்டிபயாடிக் மருந்துகள் செயல்படுகின்றன. ஆனால் வைரஸ்களுக்கு இது பொருந்தாது. வைரஸ்களும் புரதங்களைத் தயாரிக்கின்றன.பாக்டீரியாக்கள் தங்கள் ஆற்றலுக்காக ஹைட்ரஜனைப் பயன்படுத்துகின்றன.

முத்தாய்ப்பாக ரத்தப்பரிசோதனைகள் கிருமிகளை கண்டறிவதுடன், டெங்குக்காய்ச்சலால் உடலானது பிளேட்லெட்களை எவ்வளவு வேகமாக இழந்துவருகிறது என்பதனையும் காட்டிக்கொடுக்கும்.

நவீன ரத்தப்பரிசோதனைகள் மனிதனின் வாழ்நாளை நீட்டிக்க உதவுகிறது என்று மட்டற்ற மகிழ்ச்சிகொள்வோம்.

-ஆசிரியர்

editor@tamilhealthcare.com

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here