முடக்குவாதம் குறித்து ஆயுர்வேத மருத்துவம் என்ன சொல்கிறது? –
மரு. இல.மகாதேவன்(ஆயுர்வேதம்)
முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) என்பது உடலில் உள்ள அனைத்து சிறிய பெரிய மூட்டுகளையும் பாதிக்கும் ஒருவகையான வாத நோயாகும். இதனை ஆங்கிலத்தில் Autoimmune Disorders கூறுவர். நம் உடலிலுள்ள ஒரு தன் உடல் தாக்க நோயாகும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune System), மூட்டுகளில் உள்ள திசுக்களை தாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது. இது உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கலாம். இந்நோய்க்கான மிகச் சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முறையான சிகிச்சை முறைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பு, சிறு சிறு பயிற்சிகள், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் முதலியவை இதன் சிகிச்சைகளில் அடங்கும்
முடக்கு வாதம் என்றால் என்ன?
உடலில் இருக்கும் உடலின் இருபுறமும் உள்ள பெரிய மற்றும் சிறிய மூட்டுகளில் இது ஏற்படுகிறது. இதில் வலி வீக்கம் முதலிய அறிகுறிகள் காணப்படலாம். விரல்கள், கைகள் மணிக்கட்டுகள், முழங்கால்கள், கணுக்கால்கள், கால் விரல்கள் முதலிய மூட்டுகள் அதிகம் பாதிப்படைகிறது. இந்நோய் மூட்டுகளை சிதைக்க செய்கிறது. எலும்புகளை அறிக்கச் செய்கிறது. நாட்பட்ட நிலையில் மூட்டுகள் ஒன்றோடொன்று இணைந்து ஒருவித இருக்க நிலையை அடைய செய்கிறது. இதனால் மூட்டுகளை நீட்ட மடக்க சிரமம் ஏற்படுகிறது.
முடக்குவாதம் மூட்டுகளை மட்டுமல்ல உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது. குறிப்பாக கண், தோல், வாய், நுரையீரல் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளில் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முடக்கு வாதம் யாருக்கு வரும்?
முடக்குவாதம் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வருவதாக (3:1) ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
முடக்கு வாதம் பொதுவாக 30 முதல் 60 வயது இடையில் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். அபூர்வமாக குழந்தைகளுக்கும், இளம் பதின் பருவத்தினருக்கும் வருவதுண்டு. அப்படி வரும் பொழுது அதனை Still’s disease என்று கூறுவோம். அறுபது வயதிற்கு மேல் வருபவர்களுக்கு LORA [ Late-Onset Rheumatoid Arthritis] என்று கூறுவோம்.
முடக்குவாதத்தின் அறிகுறிகள் என்னென்ன?
முடக்கு வாதம் ஒவ்வொரு நபருக்கும் வேறு வேறுவிதமான அறிகுறிகளை ஏற்படுத்தும். பொதுவாக அனைத்து மூட்டுகளுமே பாதிக்கப்படும். சிலருக்கு நோய் முற்றும் வேகம் (Progression) மிகவும் நிதானமாக பல வருடங்களாக தொடர்ந்து இருக்கும். ஒரு சிலருக்கு முடக்குவாதத்தின் அறிகுறிகள் வேகமாக பரவி மூட்டுகளை முடக்கிப் போடும். இந்நோயில் பொதுவாக நோய் திடீரென அதி தீவிரமடைதல் (Relapse), அறிகுறி இல்லாமல் இருத்தல் (Remission) போன்ற நிலைகள் மாறி மாறி காணப்படும்.
முக்கிய அறிகுறிகள்
* வலி, வீக்கம், இருக்க நிலை (Stiffness), மூட்டுகளை தொடும் போது வலி ஏற்படுதல் (Tenderness)
* Early morning stiffness என்று சொல்லப்படும் அதிகாலையில் ஏற்படும் இறுகிய மூட்டு நிலை. இது 10 நிமிடத்தில் இருந்து 2 – 3 மணி நேரம் கூட தொடரலாம்.
* நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது மூட்டுகளை அசைக்காமல் வைத்திருந்து பிறகு மூட்டுகளை அசைக்கும் போதும் விறைப்பு தன்மை (Stiffness) காணப்படும்.
* குறிப்பாக இந்த நோயில் உடலின் இரு பகுதியிலும் உள்ள மூட்டுகளில் ஒரே போல் (Symmetrical) பாதிப்பு ஏற்படும்.
* அதிக களைப்பு சில நேரங்களில் காய்ச்சல் போன்றவையும் ஏற்படலாம்.
– தொடரும்
Leave a Reply