ஆசிரியர் பக்கம்ஆசிரியர் பக்கம்

உண்ணாவிரதம் என்ன கட்டாயமா?

தினமும் உண்ணாவிரதம் என்ன கட்டாயமா?

தகவல் தொடர்புச் சாதனங்கள்,சோசியல் மீடியா வருவதற்கு முன்பு வரை நன்றாகத் தான் உறங்கிக்கொண்டிருந்தோம். இப்போதெல்லாம் whatsapp ல் Lastseen 1.30 A.M என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இரவு உணவு 11 மணிக்குச் சாப்பிட்ட பிறகு காலை உணவு 9 மணிக்குச் சாப்பிட்டீர்கள்.
என்றால் இரவு உணவிற்கும் பகல் உணவிற்கும் இடையே 10 மணிநேர உண்ணாவிரதம் என்று அர்த்தம்.
இளைய சமுதாயத்தினரிடம்சமீபகாலமாக அதிகரித்து வரும் ஒரு பழக்கம் காலை உணவினைப் புறக்கணிப்பது. காரணம் இரவு படுப்பதும் தாமதம்,எழுவதும் தாமதம் எழுந்தவுடன் துரிதகதியில் வேலைக்குச் செல்வதினால் காலை
உணவுக்கு பைபை…….
காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடைகுறையும் அதுவும் நல்லதுக்குதான் என்று நினைத்துக்கொள்கின்றனர்.
இப்போது உடலில் என்ன நடக்கிறது. இரவு 11 மணிக்குச் சாப்பிட்ட பின்பு மறுநாள் மதியம் 1 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால் 14 மணிநேர பட்டினி. 24 மணிநேரத்தில் 14 மணிநேரம் உங்கள் உடல் உணவில்லாமல் செயல்படுகிறது என்று மனதில் கொள்ளுங்கள்.மதியம் 1 மணிக்கு அகோரப் பசி என்று உணவினை உள்ளே தள்ளுகின்றனர்.
இங்கே தள்ளுகின்றனர் என்று சொல்வதற்க்குக் காரணம் உணவை ருசித்துச்சாப்பிட முடியாச் சூழல். அரைமணி நேர உணவு இடைவேளையில் எப்படி ரசித்து,ருசித்துச் சாப்பிடுவது?
காலை உணவு உங்கள் உடலுக்குத்தேவையான குளுக்கோஸ் அளவை சீராக வைத்து இருக்கிறது. காலை உணவு இல்லாததால் ரத்த சர்க்கரை அளவு குறையும். இதனால் படபடப்பு, மூளைக்குச்சேரவேண்டிய குளுக்கோஸ் கிடைக்காததினால் மூளைச்சோர்வு என்று உங்கள் வேலைநேரத்தில் வேலையை
உடல் செய்ய முடியாமல் திணறும். இது நீங்களே உங்கள் உடலுக்குக் கொடுக்கும் தண்டனை என்பதை உணருங்கள்.

வண்டியில் எரிபொருள் இல்லாமல் வண்டியை ஓட்டுகிறீர்கள் எனப்
புரிந்துகொள்ளுங்கள்.இரு சப்பாத்தியில் சிறிது ஜாம் அல்லது ஒரு கப் பால் அல்லது 200மி.லி திராட்சைச் சாறு அதுவும் இல்லையா இரண்டு வாழைப்பழங்கள் சிறிது தேன் இதையாவது சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.
காலை உணவு தவிர்ப்பவர்களுக்கு இதய பாதிப்புகள்,சர்க்கரை நோய் விரைவில் வருதல்,அல்சர் பாதிப்புகள்,உணவு செரிமானப் பிரச்சனை,வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் அமில,காரத் தன்மை மாறுபாடு அடைவதால் அளவுக்கதிகமான கோபம்,எரிச்சல்,மன இறுக்கம் ஏற்படுதல் போன்ற பல்வேறு
பிரச்சனைகள் வர வழிகோலுகிறது…….
இளைஞர்களுக்கே இப்படி என்றால்…………..
பள்ளிச்சிறார்கள் கூட தற்சமயம் இப்படிச் செய்கிறார்கள்……..
கவனிக்கவேண்டியது பெற்றோர்களும்,ஆசிரியர்களும் தான்…….
ஏனென்றால் இப்போது அதிக அளவு தற்கொலைகள் செய்துகொள்வது பள்ளிச்சிறார்களும்,இளைஞர்களுமே……
உலகக் கடிகாரத்தைப் பார்க்கும் நாம் உடல் கடிகாரத்தையும் சிறிது பார்ப்போமே.

-அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்தத் தீபாவளித் திருநாளில் உங்கள் மனம் குதூகலமாக இருப்பதற்குக்

காரணம் தீபாவளிப் பண்டங்களால் காலையில் உங்கள் வயிற்று நிறைந்து
இருப்பதினால் தான்.

Show More

Related Articles

1 thought on “உண்ணாவிரதம் என்ன கட்டாயமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close